அதிரை டுடே.மார் 11
இந்தியா விடுத்திருக்கும் பயண ஆலோசனை: கேள்விகளுக்குப் பதிலளித்த திருச்சி விமான நிலைய சுகாதார அதிகாரிகள்....
சிங்கப்பூர் உட்பட சுமார் 11 நாடுகளிலிருந்து இந்தியா செல்வோர், இனி 14 நாள்களுக்குத் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று இந்திய அரசாங்கம் ஆலோசனை கூறியுள்ளது.
(https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1605899)
இந்தியாவில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவது அதன் நோக்கம்.
சிங்கப்பூர், சீனா, ஹாங்காங், தென் கொரியா, ஜப்பான், இத்தாலி, மலேசியா, தாய்லந்து, ஈரான், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய பகுதிகளில் இருந்தோ, அவை வழியாகவோ இந்தியா செல்வோருக்கு அந்த ஆலோசனை பொருந்தும்.
அப்படியானால் இந்தியாவுக்குச் சென்றால் வீட்டில் மட்டும்தான் இருக்கமுடியுமா? வெளியில் எங்கும் செல்லக்கூடாதா? பொது இடங்களுக்குச் செல்லக்கூடாதா? ஏதாவது இடத்தில் தனிமைப்படுத்திவிடுவார்களா? என்று 'செய்தி' நேயர்கள் பலர் கேட்டிருந்தனர்.
அதனையடுத்து 'செய்தி' இந்திய விமான நிலையங்களில் உள்ள சுகாதார அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தது.
சென்னை, புதுடில்லி விமான நிலையங்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
மும்பை விமான நிலையம், அது குறித்து மேல்விவரங்கள் பெறக் காத்திருப்பதாகவும், அதுவரை ஏதும் கூற விரும்பவில்லை என்றும் தெரிவித்தது.
திருச்சிராப்பள்ளி விமான நிலைய சுகாதார அதிகாரிகள் அதன் தொடர்பில் சில விளக்கங்களை அளித்தனர்.
நாங்கள் தற்போது விமானத்தில் திருச்சி வந்து இறங்குவோருக்கு உடல்வெப்பநிலையைப் பரிசோதனை செய்கிறோம்.
அவர்களுக்கு சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கின்றனவா என்று சோதிக்கிறோம்.
அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய படிவத்தைப் பெற்றுக்கொள்கிறோம்.
நோய் அறிகுறிகள் தென்படுவோரைத் தனிமைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் நோய்வாய்ப்பட்ட சிலர் அறிகுறிகள் ஏதுமின்றி வர வாய்ப்பிருக்கிறது. சிலருக்கு அவர்கள் உட்கொள்ளும் மாத்திரைகளால், அறிகுறிகள் தென்படாமல் இருக்கலாம். அவர்களை நாங்கள் கண்டுபிடிக்கவோ, தனிமைப்படுத்தவோ முடியாது.
அதனால், இந்த நாடுகளிலிருந்து வரும் பயணிகள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதையே வலியுறுத்த விரும்புகிறோம்.
அவர்கள் முடிந்தவரை பொது இடங்களுக்குச் செல்லாமல் தவிர்த்தால் நல்லது என்பதால் இந்த ஆலோசனை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கம் தமது குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விடுத்திருக்கும் பயண ஆலோசனை இது. மேல் விவரங்களுக்குக் காத்திருக்கிறோம்.
என்று அவர்கள் தெரிவித்தனர்.
அதன் தொடர்பில் தங்களுக்கும் பல நாடுகளிலிருந்து அழைப்புகள் வருவதாகவும், அதிகாரிகள்

0 Comments