அதிரை டுடே:மார்.11
குவைத் பயணிகள் விமானங்களை மார்ச் 13 வெள்ளிக்கிழமை முதல் நிறுத்த முடிவு குவைத்தில் இரண்டு வாரங்கள் பொது விடுமுறை.
வெள்ளிக்கிழமை மார்ச் 13 முதல் குவைத்திற்கு வரும் அனைத்து பயணிகள் விமானங்களையும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்படும் எனவும் , (சரக்கு விமானங்களைத் தவிர்த்து) குவைத் செய்தி நிறுவனமான குனா இன்று மாலை இவ்வாறாக செய்தி வெளியிட்டுள்ளது.
மார்ச் 12 முதல் மார்ச் 26 வரை நாட்டில் ஒரு பொது விடுமுறையை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்,
மார்ச் 29 ஆம் தேதி பணிகள் மீண்டும் தொடங்குகின்றன, என்றும், மேலும் முக்கிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் திறந்த நிலையில் இருக்கும்.
குவைத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் (ஜமியாக்கள்) மற்றும் அவற்றின் கிளைகள் வழக்கம்போல திறந்து இருக்கும் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.
ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் மற்றும் கஃபேக்களுக்கு செல்ல மக்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக குவைத் செய்தி நிறுவனம் (KUNA) செய்தி வெளியிட்டுள்ளது.
நன்றி:குவைத் தமிழ் சோஷியல் மீடியா
0 Comments