அதிரையில் இரண்டு மாதம் வாடகையை தள்ளுபடி செய்த வீட்டு உரிமையாளர்.


அதிரை டுடே:மார்.29
கொரோனா வைரஸ் தாக்கத்தால் அரசு 144 தடை உத்தரவு போட்டுள்ள நிலையில் ஏழை எளிய நடுத்தர மக்கள் வேலையின்றி வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவை சேர்ந்த அன்வர் அலி அவர்கள் வீடு ஒன்றை கட்டி வாடகைக்கு விட்டு இருந்தார். தற்போது உள்ள சூழ்நிலையில் இரண்டு மாதம் வாடகை வேண்டாம் என்று அக்குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.

நமதூரில் ஏராளமான வீடுகளில் வாடகைக்கு ஏழை எளிய நடுத்தர மக்கள் குடியிருந்து வருகின்றனர். அவர்களின் துயர் துடைக்கும் வகையில் வீட்டின் உரிமையாளர்கள் இது போன்று அறிவித்தால் இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இப்பதிவு விளம்பர நோக்கில் பதியபட்டவை அல்ல.

Post a Comment

0 Comments

'/>