அதிரை டுடே:மார்.20
நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு மாரச் 20 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டில்லியில் கல்லூரி மாணவி நிர்பயாவை ஆறு பேர் கொண்ட கும்பல் பேருந்தில் கற்பழித்தது.
நிர்பயா தீவிர சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றும் 13 நாட்களை கடந்தும் சிகிச்சை பலனின்றி உயிரழந்தார். அந்த வழக்கில் பேருந்து ஓட்டுனர் காவல் துறை விசாரணையின் போதே தற்கொலை செய்து கொண்டார். சிறுவர் ஒருவர் மூன்றாண்டு தண்டனை பெற்று பின் விடுதலை ஆனார். மீதமுள்ள நால்வருக்கும் தண்டனை உறுதி செய்திருந்தது கீழை நீதிமன்றம்.
குற்றவாளிகள் மேல் முறையீடு செய்தும் கருணை மனுக்கள் நீட்டியும் ஆண்டுகள் ஓடின. மூன்று முறை தூக்கு தண்டனை தேதி அறிவித்து தண்டனை ரத்தானது குற்றவாளிகள் கொடுத்த கருணை மனுக்களும் நிராகரிக்கபட்டது. மேல்முறையீட்டில் சரியான காரணம் இல்லாததால் குற்றவாளிகளான முகேஷ் சிங், அக்சய் தாகூர், பவன் குப்தா, வினய் ஷர்மா ஆகிய நால்வருக்கும் டில்லி பாட்டியாலா உச்ச நீதிமன்றம் கொடுத்த உத்தரவின் பேரில் திஹார் சிறையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

0 Comments