காவல் துறை கண்டித்து SDPI கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

அதிரை டுடே.பிப் 16 

கடந்த (14.07.2017) வெள்ளிக்கிழமை சென்னை வண்ணாரப்பேட்டையில் தாக்குதல் நடத்தி, சமூக அமைதியை கேடுக்கும் தமிழக அரசை மற்றும் காவல் துறையை கண்டித்தும், பாரதீய ஜனதா கட்சியை கண்டித்தும் அதிராம்பட்டித்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.



SDPI கட்சி சார்பில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் புகாரி தலைமையில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சகோதரி வழக்கறிஞர் N. சஃபியா மாநில செயலாளர், SDPI கட்சி,  சகோதரர் N.முஹமது புஹாரி, தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்,SDPI கட்சி,சகோதரர் A.ஹாஜா அலாவுதீன் தஞ்சை & திருவாரூர் மாவட்ட தலைவர்  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்.


இப்போரட்டத்தில் அதிராம்பட்டினம் மற்றும் அதனை சார்ந்த ஏராளமான முஸ்லீம் ஜமாத்தார்கள், சகோதர, சகோதரி மற்றும் தாய்மார்கள், இளைஞர்கள்,  குழந்தைகள் என சுமார்  1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.


Post a Comment

0 Comments

'/>