வளைகுடா நாடுகளில் வங்கிக் கடனை திருப்பி செலுத்தாமல் இந்தியாவில் ஒளிந்திருப்பவர்களுக்கான புதிய சட்டம்.!


அதிரை டுடே:பிப்.09
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சில வங்கிகளில் லோன் எடுத்துவிட்டு, கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் நாட்டிற்கு திரும்பும் இந்திய நாட்டினரைப் அந்த வங்கிகள் பின் தொடர்கின்றன.

2020 ஜனவரி மாதம் இந்தியாவின் சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் அரசிதழ் அறிவிப்பை வெளியிட்ட பின்னர் உள்ளூர் வங்கிகளின் இந்த முயற்சி எடுக்கப்பட்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸை சிவில் நடைமுறைக்கு ஒரு “பரஸ்பர ஆட்சிப்பகுதியாக” அறிவித்தது. இதன் பொருள் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு எதிரான ஐக்கிய அரபு அமீரக நீதிமன்றங்களின் தீர்ப்புகள் மற்றும் பிற சிவில் வழக்கு குற்றவாளிகளுக்கு, இந்தியாவில் தண்டனை நிறைவேற்றப்படும் (மரண தண்டனையாக இருந்தாலும் சரி). அதேபோல் இந்தியாவில் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு, அமீரகத்தில் தண்டனை வழங்கலாம்.

கடனளிப்பவர்களிடமிருந்து சுமார் 50,000 கோடி (ரூ. 500 பில்லியன்; 25.67 பில்லியன் திர்ஹம்ஸ்) மீட்கும் பொருட்டு, ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஒன்பது வங்கிகள், கடனளிப்பவர்களுக்கு எதிராக சட்ட வழியை மேற்கொள்வது குறித்து பரிசீலித்து வருவதாக இந்தியாவின் எகனாமிக் டைம்ஸ் (Economic Times) நேற்று (February 08 2020) தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

'/>