ஏப்ரல் இறுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்?

அதிரை டுடே.பிப் 10
ஏப்ரல் மாத இறுதியில் தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னையில் இன்று (பிப்.,10) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து கட்சியினரிடம் முதல்வர் பேசியதாகவும், தேர்தலை எதிர்கொள்ள தயாராகும்படி கட்சி நிர்வாகிகளை அவர் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் நகர்ப்புறங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட கோர்ட் அவமதிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்துள்ளது.இதனால் ஏப்ரல் மாத இறுதியில் மாநகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. 
அத்துடன் சேர்த்து ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாத மத்தியிலோ அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments

'/>