அதிரை டுடே.பிப் 11
சாட் பாட் என்ற தானியங்கு பதில் மூலம் சாலிக் (Salik) சேவைகளை வழங்க துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) சாலிக் வெர்ச்சுவல் அசிஸ்டன்ட் (Salik Virtual Assistant) என்ற ஸ்மார்ட் சேனலை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த போர்ட்டலில் (www.salik.gov.ae) சாலிக் வெர்ச்சுவல் அசிஸ்டன்ட்டின் பயனர்கள், தங்களுக்கு எழும் கேள்விகளுக்கான உடனடி பதில்களை சாட் பாட் என்ற தானியங்கு பதில் மூலம் பெறலாம்.மேலும், இந்த சேனல் உங்களுக்கு தேவையான சாலிக் கணக்கின் இருப்பு குறித்த விவரங்களையும் மற்றும் டாப்-அப் பற்றிய தகவல்களையும் வழங்கும்.
கூடுதலாக, வாடிக்கையாளர் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க முடியாவிட்டால், வாடிக்கையாளர் தானாகவே கேள்வி சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு பரிந்துரைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட் சேனல் மூலம், வாடிக்கையாளர்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் மற்றும் வாகன பிளேட் எண்ணை உள்ளிடுவதன் மூலம் கிரெடிட் கார்டு அல்லது விற்பனை புள்ளிகளில் கிடைக்கும் வவுச்சர்கள் மூலம் இந்த சாலிக் கணக்குகளை சுலபமாக ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.
மேலும் ஒரு தகவல் :
துபாயில் ஆள்யில்லாத 7 சுங்கசவாடி (TOLL) உள்ளது.
0 Comments