புதிய அரசியலை உருவாக்கி இருக்கிறார்கள்"... கெஜ்ரிவால் பேச்சு...

அதிரை டுடே.பிப் 11
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 8ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், பெரும்பாலான இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைக்க உள்ளது.

டெல்லி முழுவதும் ஆம் ஆத்மி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவரும் சூழலில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்களும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் வெற்றி குறித்து மக்கள் மத்தியில் பேசிய கெஜ்ரிவால், "டெல்லி மக்கள் ஒரு புதிய அரசியலை உருவாக்கி இருக்கிறார்கள். நாட்டின் தலைநகரில் நாங்கள் ஆற்றிய பணிகள் எங்களுக்கு வெற்றியைக் கொடுத்துள்ளது.
டெல்லியில் கல்வி, மின்சாரம், மருத்துவ வசதி போன்றவற்றை வழங்கியவர்களுக்கே மக்கள் வாக்களித்துள்ளார்கள். இது மக்களின் வெற்றி" என தெரிவித்தார்

Post a Comment

0 Comments

'/>