அதிரை டுடே:பிப்.06
மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள CAA சட்டம் , மற்றும் NRC , NPR திட்டங்கள் தொடர்பாக திரைப்பட நடிகர் திரு , ரஜினிகாந்தின் கருத்து அதிருப்தியளிக்கிறது .
ஒரு தரப்பு கருத்துகளை மட்டுமே ரஜினி பிரதிபலித்துள்ளார் . பெரும்பான்மை மக்களின் கருத்துகளில் உள்ள நியாயத்தை அவர் புரிந்து கொள்ளவில்லை , சட்டவல்லுனர்கள் , அறிஞர்கள் , சிந்தனையாளர்கள் , கல்வியாளர்கள் , மாணவர்கள் நாட்டிலுள்ள பெருவாரியான அரசியல் கட்சியினர் , முஸ்லிம் மதகுருமார்கள் , ஆண்கள் பெண்கள் என அனைத்து தரப்பு மக்களும் , CAA , NRC , NPR ஆகிய சட்டங்களையும் பாஜக அரசின் உள்நோக்கத்தையும் சரியாகப் புரிந்து கொண்டதன் விளைவாகவே ஒன்று திரண் டு கடந்த 50 நாட்களுக்கும் மேலாக போராடிவருகின்றனர் .
மேலும் இந்தியாவின் 15 மாநிலங்களின் முதல்வர்கள் இச்சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் . " தூண்டிவிடப்படுகிறார்கள் " " பீதியைக் கிளப்புகிறார்கள் " என்பது போன்ற வார்த்தைகள் ஒரு பெரும் மக்கள் இயக்கத்தை கொச்சைப்படுத்துவதாகும் . முஸ்லிம் மதகுருமார்கள்தான் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு முதல் களப்பலியானவர்கள் என்கிற வரலாற்றை திரு , ரஜினிகாந்த் அவர்களுக்கு நினைவூட்டுகிறோம் . அதே பொறுப்புணர்வோடுதான் தற்போது முஸ்லிம் மதகுருமார்கள் , ஜனநாயக சக்திகளுடன் இணைந்து பாஜக அரசிற்கு எதிராகப் போராடிவருகிறார்கள் .
இப்போராட்டக்காரர்களின் கருத்துகளை அவர் கேட்கவேண்டும் . ஜனநாயக ரீதியாக போராடுகிற மக்களை ரஜினிகாந்த் தொடர்ந்து அவமதித்து வருகிறார் என்ற பழியிலிருந்து அவர் விடுபட வேண்டும் . அவரை சந்தித்து விளக்கமளிக்க தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை திட்டமிட்டுள்ளது .
அல்லாஹ் அவன் விரும்புகிறவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான் . ( அல்குர்ஆன் 28 ; 56 )
0 Comments