தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை: அமைச்சர்

அதிரை டுடே.பிப் 03
சென்னை: 'சீனாவிலிருந்து தமிழகம் வந்த 12 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது' என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் தற்காப்பு பணிகள் தொடரும். கொரோனா தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 8 சீனர்கள் உட்பட 10 நேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர திருச்சி மற்றும் ராமநாதபுரத்தில் சிகிச்சை பெறும் இருவர் உட்பட மொத்தம் 12 பேருக்கும் கிங் இன்ஸ்டிடியூட்டில் விரிவான சோதனைகள் நடத்தப்பட்டன. சோதனையில் முடிவில் அவர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

'/>