CAA வுக்கு எதிர்ப்பு: பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் அமளி

அதிரை டுடே.பிப் 03 

எதிராக பார்லி.,யின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு, போராட்டம் நடத்தி வருவதால் கடும் அமளி ஏற்பட்டுள்ளது.

பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.,31 ம் தேதி துவங்கியது. பிப்.,1 அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21 ம் நிதியாண்டிற்கான மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று (பிப்.,03) முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடத்தப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் இன்று அவை கூடுவதற்கு முன் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என இரு அவைகளிலும் அனைத்து எதிர்க்கட்சிகளும் நோட்டீஸ் அளித்திருந்தன.
CAA வை திரும்பப் பெற வேண்டும், சிஏஏ., அமல்படுத்தப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். என்ஆர்சி மற்றும் என்பிஆர் கொண்டு வருவதற்கான நடைமுறைகளை உடனடியாக கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் எதிர்க்கட்சிகளின் நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது. காங்., இடதுசாரிகள், திரிணாமுல் காங்., பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சிஏஏ.,வுக்கு எதிராகவும்,
ஜாமியா பல்கலையில் போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, பா.ஜ., எம்.பி.,க்களின் சர்ச்சை பேச்சு ஆகியவை தொடர்பாக இந்திய முஸ்லீம் லீக் கட்சியும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்தன.
இந்த நோட்டீஸ்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படாமல் அவை துவங்கியதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர். இதனால் இரு அவைகளிலும் அமளி ஏற்றபட்டது. இருப்பினும் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே பட்ஜெட் தொடர்பாக நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் லோக்சபாவில் பேசினார். எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்ததை அடுத்து ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது.

Post a Comment

0 Comments

'/>