வேலூர் இப்றாஹிம் மீது நடவடிக்கை எடுக்க கோரி பட்டுக்கோட்டை DSP யிடம் SDPI மனு.


அதிரை டுடே:ஜன.21
தமிழ்நாடு ஏகத்துவ பிரச்சார ஜமாத் என்ற பெயரில் வேலூர் இபுராஹிம் எனும் பாஜக ஆதரவாளர் எஸ்.டி.பி.ஐ. கட்சி குறித்து தொடர்ந்து தவறானவற்றை சமூகத்தின் மத்தியில் பரப்பி பொது அமைதிக்கு பங்கம் விலைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவகிறார். இந்த பாஜக ஆதரவாளர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சை தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் சஃபியா நிஜாமுதீன் அவர்கள் தலைமையில் பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து மனு கொடுத்தனர்.

தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் N.முகமது புகாரி, மாவட்ட பொதுச்செயலாளர் S.J.சாகுல் ஹமீது, மாவட்ட செயலாளர் ரஹீஸ், மதுக்கூர் நகர செயலாளர் அசாருதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments

'/>