வேதையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம்.


அதிரை டுடே:ஜன.22
வேதாரணியத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கருப்பு சட்டங்களுக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் இன்று நாங்கள் இந்தியர் நாளை? என்ற தலைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., நிறைவுரையாற்றும் போது, மோடியும், அமித் ஷாவும் மத நல்லிணக்கத்தை, அமைதியை சீர்குலைக்க நினைக்கிறார்கள். அதை எல்லா சமூக மக்களோடும் இணைந்து முறியடிப்போம் என சூளுரைத்தார்.

முன்னதாக அவர் பேசும்போது, களியக்காவிளையில் மாஃபியாக்களால் கொல்லப்பட்ட சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிடம் எழுந்து நிற்குமாறு கூற, பல்லாயிரக்கனக்கான மக்கள் உருக்கமுடன் மவுன மரியாதை செய்தனர். இதை கண்டு பல போலீஸ்காரர்கள் கண்கலங்கி நன்றி கூறினர்.

இதில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் திரு.ரமணி, P.V.ராஜேந்திரன் Ex.MP, அய்யா தர்மயுக பேரவை நிறுவனத் தலைவர் சுவாமி.P. பாலமுருகன், மா.மீனாட்சி சுந்தரம் Ex MLA, ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மேலும் காமராஜ் Ex MLA, நிஜாம் Ex MLA, வணிகர் சங்க பிரமுகர் தென்னரசு, LSE பழனியப்பன், கவிஞர் மாசி, பெரியப்பள்ளி இமாம் சாகுல் ஹமீது ஆகியோரும் உரையாற்றினர்.

நாகை சந்திரமோகன், விவசாய அமைப்புகளை சேர்ந்த பார்த்தசாரதி, திருநாவுக்கரசு, இலக்கிய அமைப்புகளை சேர்ந்த புயல்.குமார் போன்ற பிரபலங்களும் வருகை தந்திருந்தனர்.

வேதாரண்யம் வட்டாரத்தை சேர்ந்த பல்வேறு கட்சிகள், விவசாய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், சமூக நீதி அமைப்புகள் ஆகியவற்றின் தலைவர்கள் மட்டுமின்றி, பல்வேறு சாதி சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்று பேராதரவை வழங்கினர். வயதானவர்களும் ஆர்வத்தோடு திரண்டனர்

தோப்புத்துறை ஜமாத் தலைவர் ஷேக், முன்னாள் ஜமாத் தலைவர்கள் KM KI நவாஸ்தீன், ஜபருல்லாஹ், SM ஜெய்னுதீன், Z கமால் மற்றும் சுபஹானி, ஆகியோருடன் பல்வேறு சமூகங்களை சேர்ந்த சுற்று வட்டார கிராம பஞ்சாயத்து பிரமுகர்கள் என மத நல்லிணக்க சங்கமமாக இந்நிகழ்வு அமைந்தது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நாகை, திருவாரூர், தஞ்சை தெற்கு மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், என பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

கண்டன கோஷங்களை மாணவர் இந்தியா அமைப்பினர் எழுப்பினர்

கறுப்பு சட்டங்களுக்கு எதிரான கூட்டமைப்பு என்ற பொது பெயரில் அனைத்து மக்களையும் களத்தில் ஒருங்கிணைத்த போராட்ட குழு பாராட்டுக்குரியது.






Post a Comment

0 Comments

'/>