அதிரை டுடே:ஜன.22
மல்லிப்பட்டினம் மனோராவில் பிளாஸ்டிக் கழிவுகளும், மது பாட்டில்களும் மிக அதிகமாக இருப்பதால் அங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்கும் வகையில் இருந்தது. எனவே நமது அடையாள சின்னத்தை மீட்டெடுக்கும் வகையில் நேற்று செவ்வாய் கிழமை 21/01/2020 மிக சரியாக காலை 6 மணியிலிருந்து காலை 11 மணி வரை பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் உடைந்த மற்றும் காலி மதுபாட்டில்களை அகற்றும் பணியை பட்டுக்கோட்டை விதைகள் அமைப்பின் சார்பில் நடைபெற்றது. விதைகளின் இச்சீறிய பணியை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
0 Comments