மத்திய அரசின் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் CAA, NRC, NPR ஆகியவற்றிற்கு எதிராக அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து பள்ளிவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக காதிர் முகைதீன் பள்ளி மாணவர்கள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு, சட்டத்தை எதிர்ப்பவர்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டன. இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது கையெழுத்துகளை பதிவிட்டு சென்றனர்.

0 Comments