அதிரை டுடே:ஜன.22
பாபரி மஸ்ஜித் சங்பரிவார்களால் இடிக்கப்பட்டப் போது ஆட்சியிலிருந்தும் அதனை தடுக்கத் தவறிய நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சியோடு கேரளாவில் முஸ்லீம் லீக் கூட்டணி வைக்கக் கூடாது என முஸ்லீம் லீகின் அன்றைய தலைவர் சுலைமான் சேட் சாஹிபு அவர்களால் வலியுறுத்தப்பட்டு, ஏற்கப்படாத நிலையில் சுலைமான் சேட் சாஹிபு அவர்களால் இந்திய தேசிய லீக் துவக்கப்பட்டு எம்.ஏ. லத்தீப் சாஹிபு தலைமையில் தமிழ்நாட்டில் அக்கட்சி வலுபெற்று 96 ஆம் வருட சட்டமன்ற தேர்தலில் 5 MLA க்களை பெற்று தமிழக முஸ்லீம் அரசியல் கட்சிகளின் கடந்த 50 ஆண்டுகால வரலாற்றில் 5 MLA க்களை பெற்ற கட்சி என்ற பெருமையை பெற்றது மட்டுமல்லாமல், இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடக, கேரளா என 3 மாநிலங்களில் MLA க்களை பெற்ற முஸ்லிம் கட்சி என்ற பெருமையையும் பெற்றது. இந்நிலையில் கால மாற்ற ஓட்டங்களால் கட்சி வளர்ச்சி பின் தங்கிய நிலையில் உள்ளது உண்மை.
பாசிச ஆட்சி, பசுவின் பெயரால் முஸ்லீம்கள் படுகொலை, ஜெய்ஶ்ரீராம் கோசத்தின் பெயரில் கும்பல் கொலை, சிறுபாண்மை சட்டங்களில் தலையீடு, பாபரிமஸ்ஜித் இடம் பறிபோனது இப்போது குடியுரிமை பிரச்சனை இப்படி சங்பரிவார்களால் முஸ்லிம்களுக்கு பல்வேறு நெருக்குதல்களும், அச்சுறுத்தல்களும் ஏற்பட்டுள்ள நிலையில் முஸ்லிம் சமுகம் பல்வேறு கட்சிகளாகவும், கட்சிக்குள்ளும் கூறுகளாகவும் கோஷ்டிகளாகவும் இருப்பது சமுதாயத்திற்கு நல்லது அல்ல ஆகவே நலிவடைந்த கட்சிகளை கலைப்பது அல்லது பிற கட்சிகளோடு இணைப்பது ஆகிய நடவடிக்கை மூலமாக முஸ்லிம் கட்சிகளின் கட்டுக்கடங்கா எண்ணிக்கையை குறைப்பது மிக அவசியம். இதனை எல்லா முஸ்லிம் சிறுபாண்மை கட்சிகளும் செயல்படுத்த முன்வரவேண்டும். யாரை சந்தித்தாலும் முஸ்லிம் கட்சியா என முகம் சுளிப்பர் என்பது உண்மை. ஆகவே கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்திய தேசிய லீக் தமிழ்நாடு பிரிவை கலைக்க வேண்டும் என்ற எனது கருத்தை முன் வைக்கின்றேன்.
இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட மற்றும் கிளை கழகங்கள் தன்னை தானே கலைத்துக் கொள்ள வேண்டுகிறேன்.
நான் பொருபேற்றிருக்கும் இந்திய தேசிய லீக்கின் தேசிய பொதுச்செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன்.
இவண்
எம்ஜிகே நிஜாமுதீன் Ex MLA
0 Comments