பள்ளிவாசலில் இந்து இந்து முறைபடி திருமணம் நடத்தி வைத்த பள்ளி ஜமாத்தார்கள். 


அதிரை டுடே:ஜன.19
மனிதநேயத்திற்க்கும் மத நல்லிணக்கத்திற்க்கும் எடுத்துகாட்டாய் விளங்கிய அபூர்வ திருமணம் கேரள காயங்குளம் சேராவள்ளி கிராமத்தை சேர்ந்த அசோகன் பிந்து தம்பதிகளின் மகள் அஞ்சுவிற்கு சரத் என்பவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு அசோகன் காலமாகி குடும்பம் கஷ்டத்தில் இருந்ததால், தன்னுடைய மகளின் திருமணத்திற்கு உதவி செய்யுமாறு அண்டை வீட்டுக்காரரான நஜுமுதீன் உதவியை நாடினார் பிந்து. சேராவள்ளி ஜமாத் நிர்வாகியான நஜுமுத்தீன், ஜமாத் சார்பாகவே இந்த திருமணத்தை நடத்தி வைக்க நடவடிக்கை எடுத்தார்.

மணமகளுக்கு 10 பவுன் நகையும் 2 லட்சம் ரூபாயும் கொடுத்ததோடு, திருமண செலவையும் ஏற்ற ஜமாத்தார்கள், சேரப்பள்ளி ஜும்மா மசூதி மண்டபத்திலேயே இந்து முறைப்படி திருமணம் சிறப்பாக நடத்தி வைக்கப்பட்டது.

ஜமாத்தார்களே வந்திருந்த அனைத்து மக்களுக்கும் விருந்து அளித்து உபசரித்ததை கண்டு அனைவரும் வியந்து பாராட்டினார்கள். இத்திருமண நிகழ்வை அறிந்த கேரள முதல்வர் பிரனாயி விஜயன் உள்ளிட்ட பல தலைவர்கள் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

Post a Comment

0 Comments

'/>