உலகம் முழுவதும் வாட்ஸ் அப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு...

அதிரை டுடே.ஜன 19

வாட்ஸ் அப்பில் வீடியோ, புகைப்படங்களை அனுப்புவதில் சிக்கல் எழுந்துள்ளது.
வாட்ஸ் அப் என்ற சமூக வலைதளத்தை உலக அளவில் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள், செல்போன் கான்டாக்ட் எண்கள், லொகேஷன் உள்ளிட்டவற்றை அனுப்பி வருகிறோம். இதில் நெட் இணைப்பு இருந்தால் போன் கால்களையும் செய்ய முடியும்.

இந்நிலையில் உலகில் பல இடங்களில் வாட்ஸப்பில் திடீரென வீடியோ, புகைப்படங்களை அனுப்புவதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்த தொழில்நுட்ப கோளாறு குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

Post a Comment

0 Comments

'/>