திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் பயணிகளுக்கான மேம்படுத்தப்பட்ட கூடுதல் வசதிகள்.

அதிரை டுடே.ஜன 12

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் பயணிகளுக்கான மேம்படுத்தப்பட்ட கூடுதல் வசதிகள்.

Tamilnadu airport development news

இங்கு தற்போது பாதுகாப்புச்சோதனை முடித்த பயணிகள், விமானத்தில் ஏறுவதற்கு முந்தைய தங்குமிடத்தில் (Security Hold Area) உட்காருவதற்கான இருக்கைகள் பற்றாக்குறையால் சிரமப்பட்டனர்.

குறிப்பாக இரவில் 10.30 மணியில் இருந்து 1.30க்குள் கோலாலம்பூருக்கு 3 சேவைகளும், சிங்கப்பூருக்கு 2 சேவைகளும், துபய் மற்றும் ஷார்ஜாவிற்கு தலா ஒரு சேவையும் இருப்பதால் பயணிகள் முனையத்தில் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு, பயணிகள் அமர்வதற்கு தேவையான இருக்கைகள் வசதிகள் விமானநிலையத்தால் செய்யப்பட்டது.

இதன் பொருட்டு, சுமார் 37 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், ஏற்கனவே உள்ள 450 இருக்கைகளைவிட கூடுதலாக 120 இருக்கைகள் வசதி செய்யப்பட்டது. இதனை இன்று 11/01/2020,






இந்திய விமானநிலையங்கள் ஆணைக்குழுமத்தின் (Airports Authority of India) மண்டல செயல் இயக்குனர் (Regional Executive Director) திரு. சந்திர குமார் அவர்கள் திறந்து வைத்தார்.

பயணிகளுக்கான சேவையில் என்றும் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையம்.

Post a Comment

0 Comments

'/>