அதிரை டுடே:ஜன.08
சமீபத்தில் அமீரக அரசு அறிவித்த ஐந்தாண்டு சுற்றுலா விசா பற்றி பல சந்தேகங்களும் கேள்விகளும் அனைவரிடமும் உள்ளன. இதுவரை ஐந்தாண்டு விசாவை பற்றி அரசு வெளியிட்ட தெளிவான தகவல்களின் கோர்வை தான் இந்த பதிவு.
புதிய வருகை/சுற்றுலா விசா திட்டம் என்ன?
கடந்த திங்கட்கிழமை (Jnauary 06 2020), ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவர், பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தலைமையில் இந்த புதிய பலமுறை நுழையும் (Multi-entry) ஐந்தாண்டு சுற்றலா விசா திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த விசாவிற்கு யார் விண்ணப்பிக்க முடியும்?
இந்த ஐந்தாண்டு சுற்றுலா விசாவிற்கு அனைத்து தேசிய மக்களும் விண்ணப்பிக்கலாம்.
தற்போதைய வருகை/சுற்றுலா விசா திட்டத்திலிருந்து இது எந்த வகையில் வேறுபடுகிறது?
தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வழங்கப்படும் சுற்றுலா விசாக்கள் 30 முதல் 90 நாட்களுக்கு மட்டுமே பயன்படும். ஆனால் திங்களன்று அறிவிக்கப்பட்ட இத்திட்டப்படி, இனி சுற்றலா விசாக்கள் ஐந்து ஆண்டுகள் வரை பயன்படும் வகையில் வழங்கப்படும்.
இந்த புதிய திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்?
2020 முதல் காலாண்டில் இது செயல்படுத்தப்படும் என்று அமைச்சரவை கூறியுள்ளதால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு இது செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விசாவிற்கு எவ்வளவு செலவாகும்? இந்த விசாவை பெற்ற பிறகு அமீரகத்தில் எவ்வளவு காலம் இருக்க முடியும்?
இந்த விவரங்களை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை. அடுத்த இரண்டு மாதங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட வேண்டும் என்பதால், அடுத்த சில வாரங்களில் கூடுதல் விவரங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது.
இந்த திட்டம் ஏன் இப்போது அறிவிக்கப்படுகிறது?
இந்த நடவடிக்கை ஐக்கிய அரபு அமீரகத்தின் சுற்றுலா பொருளாதாரத்தை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உலகளாவிய சுற்றுலாத் தலமாக அமீரகத்தை கொண்டு செல்ல உதவும் என நம்பப்படுகிறது. இந்த மாதம் அக்டோபர் முதல் எக்ஸ்போ 2020 துபாயின் போது ஐக்கிய அரபு அமீரகம் உலகிற்கு புதுமையுடன் கூடிய கண்கவரும் விருந்தளிப்பதால், நீண்ட கால விசா பார்வையாளர்களுக்கு ஒரு வரமாக மாறும் என்னும் காரணத்தினால் இந்த திட்டம் இப்போது அறிவிக்கப்படுகிறது. எக்ஸ்போ 2020 துபாய் என்றால் என்ன ?
இத்திட்டத்தினால் யாரெல்லாம் பயனடைவார்கள்?
இது விமான போக்குவரத்து, சுற்றுலா, சில்லறை விற்பனை மற்றும் விருந்தோம்பல் போன்ற முக்கிய துறைகளுக்கு பயனளிக்கும். இந்த திட்டத்தின்கீழ் பயணிகள் நீண்ட காலம் தங்குவதால் சுற்றுலா செலவுகள் கணிசமாக அதிகரிக்கும்.
தனியார் துறை வணிகங்களான உணவு மற்றும் பானங்கள், விடுமுறை குடியிருப்புகள் போன்றவையும் பயனடைகின்றன.
முக்கியமாக சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிப்பதைப் பற்றி கவலைப்படாமல் இங்கே வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் அமீரகத்திற்கு அடிக்கடி அழைத்து வரலாம்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் சுற்றுலாவை உயர்த்தவும் மற்றும் தக்கவைக்கவும், அமீரக அமைச்சரவை சமீபத்திய ஆண்டுகளில் பல விசா சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்திய உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments