எளிமையின் அழகு அதிரை மர்யம் மஸ்ஜித்.!
மஜக பொதுச் செயலாளர் மு. தமிமுன் அன்சாரி வியப்பு..!
இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அதிராம்பட்டினம் வருகை தந்தார்.
அசர் தொழுகைக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள மர்யம் பள்ளிக்கு வருகை தந்தார்.
அப்போது பள்ளியை சுற்றிப் பார்த்தவர், பள்ளியின் அழகையும், அழகின் எளிமையும் வியந்து பாராட்டினார்.
சூரிய வெளிச்சம் நிறைந்திடும் வகையில் பசுமை கட்டிடமாக இருப்பதை பாராட்டியவர், இதற்காள மின் உபயோகத்திற்காக அமைக்கப்பட்டுள்ள சோலர் (சூரிய மின் உற்பத்தி ) அமைப்பை கண்டு வியந்தார்.
தமிழகத்தின் முதல் சோலார் மின் பள்ளி இதுவாகத்தான் இருக்க முடியும் என்றவர், அதன் வளாகம் சிறிய தோட்டத்துடன் இருப்பதையும் பார்வையிட்டார்.
இது ,அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் கட்டப்பட்டு வரும் பள்ளிகளை போன்ற அமைப்புடன் இருப்பதாகவும், குறைவான வேலைப்பாடுகளுடன் எளிமையும், அழகும் சேர இது உருவாக்கப்பட்டிருப்பதாக வர்ணித்தார்.
இதில் மாதந்தோறும் சகோதர சமூக மக்களுடன் கலந்துரையாடலை நடத்த திட்டமிட்டால், அது சமூக நல்லிணக்கத்திற்கும் வழிவகுக்கும் என்று கூறினார்.
பிறகு பள்ளிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில்,எதிரே அமைந்து உள்ள மரைக்காயர் குளத்தை பார்வையிட்டவர், இதை சுற்றிலும் நடைபாதை அமைத்து , அழகு மிகு மின் விளக்குகள் , பசும் மரங்கள் என ஏற்பாடு செய்தால் அது இப்பகுதியை பயனும் , அழகும் கொண்டதாக மாற்றும் என்றார்.
, இதற்காக தொகுதி MLA மற்றும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேச வேண்டும் என்றும் ஆலோசனை கூறினார்.
0 Comments