அதிரை டுடே ஜன.12 தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அரசு விடுமுறை அளிக்கபட்டுள்ளது.
ராமநாதபுரம்,தூத்துக்குடி,நெல்லை,சிவகங்கை மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் கன முதல் மிக கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிரையில் நேற்று முதல் கனமழை தொடர்ந்து கன மழை பெய்த்து வருகிறது. ஊரின் குளங்கள் தனது முழு கொள்ள அளவு எட்டியுள்ளது. ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகாரித்துள்ளது.
இந்த நிலையில் இன்றும் அதிரையில் மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று முதல் இன்று காலை வரை தமிழகத்திலே அதிகபட்சமாக அதிரையில் பதிவான மழையின் அளவு 135 மி.மீட்டர் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
0 Comments