அதிரை டுடே:டிச.07
அன்புடையீர் ! ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது நிலவட்டுமாக ! மனிதநேய ஜனநாயக கட்சி அனைவரும் போற்றதக்க பேரியக்கமாக வளர்ந்து வருவதை தாங்கள் அறிவீர்கள்.
மரக்கன்றுகள் நடல் , நீர் நிலைகளை பாதுகாத்தல் , இரத்ததானம் செய்தல் , மருத்துவ சேவைகளை ஆற்றுதல் , பேரிடர்களின் போது நிவாரண பணிகளை மேற்கொள்ளுதல் என மனிதநேய சேவைகளை மேற்கொள்வதில் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறோம்.
தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் உயிர்காக்கும் வேலைகளையும் செய்து வருகிறோம் . ஒரு அரசியல் கட்சி என்ற நிலையை தாண்டி மஜக ஆற்றி வரும் பணிகள் அனைத்து சமூக மக்களையும் ஈர்த்து வருகிறது.
இது போன்ற பணிகளை நமது பகுதிகளிலும் செய்திடும் வகையில் ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கிட தீர்மானிக்கப்பட்டிருக்கிறது . இந்த அறப்பணிக்கு உங்களின் நன்கொடைகளை எதிர் நோக்குகிறோம். உயிர் காக்கும் இச்சேவைகளுக்கு உங்களின் பங்களிப்புகளை வாரி வழங்குவீர்.
இப்படிக்கு
மனிதநேய ஜனநாயக கட்சி
அதிரை நகரம்
தொடர்புக்கு: 7010832030, 9976921145.
0 Comments