திருவாரூரில் மமக சார்பில் ரயில் நிலையம் முற்றுகை போராட்டம்.


அதிரை டுடே:டிச.02
திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சியின் விவசாய அணி சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தும் பாஜக மோடி அரசை கண்டித்தும், விவசாயிகளிடம் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும் இன்று திருவாரூரில் ரயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது கலந்து கொண்டு விவசாயிகளுக்கு எதிராக நடக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினார்.

இதில் அக்கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை முழங்களை எழுப்பி கைதாகினர்.






 

Post a Comment

0 Comments

'/>