அதிரை டுடே:செப்.8
அதிராம்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர து.செயளாலர் B.ஹாஜா மர்ஜிக் கடந்த ஜனவரி அன்று இவர் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அதிராம்பட்டினத்தில் வாய் பேசத் தெரியாதவர்கள் பயன்பெறும் வகையில் அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட தெருக்களுக்கு பெயர் பொறிக்கப்பட்ட பலகை அமைப்பதற்கு மனு கொடுத்துள்ளார். இவருக்கு அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகத்தால் பதில் மனு அனுப்பப்பட்டுள்ளது.
பேரூராட்சி நிர்வாகத்தால் அளிக்கப்பட்ட பதிலில் கோரிக்கையை நிறைவேற்றித் தரப்படும் என்று பிப்ரவரி அன்று பதில் கொடுத்துள்ளார்கள் இதுவரைக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே இதை உடனடியாக முதலமைச்சர் தனிப்பிரிவு பதில் மனுவை நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பு நான் அதிராம்பட்டினத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகம் அமைத்து தருமாறு முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு கொடுத்துள்ளேன்
அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாக அதிகாரியால் எனக்கு அளித்த பதில் மனுவில் அதிராம்பட்டினத்தில் அம்மா உணவகம் அமைப்பதற்கு போதிய இடம் இல்லை என்று தெரிவித்தார்கள் அந்த மனுவை அவர்கள் நிராகரித்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments