கத்தார் நாட்டில் வணிக கட்டிடத்தில் தீ விபத்து..!

கத்தார் அல்-கானிம் (Al-Ghanim) பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் இன்று (13-08-2020) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து, கத்தார் உள்துறை அமைச்சகம் (MoI) ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அல்-கானிம் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து, கத்தார் சிவில் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

'/>