அதிரையில் மஜகவின் தொழிற்ச்சங்க பிரிவான MJTS ஆட்டோ ஸ்டாண்ட் துவக்கம்.


அதிரை டுடே:ஜூலை.08
மனிதநேய ஜனநாயக கட்சியின் தொழிற்ச்சங்க பிரிவான மனிதநேய ஜனநாயக தொழிற்ச் சங்கத்தின் ஆட்டோ ஸ்டாண்ட் கிளை 2 (MJTS) துவக்கம் இன்று அதிரை ஈ.சி.ஆர் கிங் ஷாப்பிங் மால் அருகில் நகர தொழிற்ச்சங்க செயலாளர் முகமது ஆரிப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட து.செயலாளர் அதிரை சேக் அவர்கள் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து பிறகு இனிப்பு மற்றும் கபசுர குடிநீரை பொதுமக்கள், ஓட்டுனர்கள், வணிகர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட து.செயலாளர் சாகுல் ஹமீது (ஸ்மார்ட்), நகர செயலாளர் அப்துல் சமது, நகர பொருளாளர் அஷ்ரப், நகர து.செயலாளர்கள் ஹாஜா மர்ஜூக், அஹமது அஸ்கர், மாணவர் இந்தியா நகர செயலாளர் மஸ்தான், ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் மனிதநேய சொந்தங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.








Post a Comment

0 Comments

'/>