அதிரை டுடே: ஜூலை,10
புதுச்சேரி பாகூர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தனவேல். இவர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டாலும், ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு அவதூறு மற்றும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தார்.
காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதற்கு இவர் சதி செய்வதாக அவர் மீது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டை வைத்தனர். இதனடிப்படையில் அவர் காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து அவரை கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பதவி நீக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்தநிலையில் சபாநாயகர் சிவக்கொழுந்து இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தனசேகரின் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்
30 பேர் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்தில் கட்சிகளின் பலம்: காங்கிரஸ் கட்சி சார்பில் பதினைந்து சட்ட மன்ற உறுப்பினர்களும்(ஒருவர் பதவி பறிப்பு), மற்றும் திமுக வில் மூன்று எம்.எல்.ஏ க்களும் சுயேட்சையாக ஒரு எம்.எல். ஏ-வும் என்.ஆர்.காங்கிரஸில் ஏழு எம்.எல்.ஏ அதிமுகவில் நான்கு எம்.எல்.ஏ வும்
உள்ளனர்.
0 Comments