அதிரையில் நாம் தமிழர் கட்சியிர் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்


அதிரை டுடே:ஜூலை.07
அதிரையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கொரோனா பேரிடர் கால நெருக்கடியில் மக்களை வாட்டும் விதமாக இந்த நான்கு மாத காலத்தில் தமிழக மக்கள் அதிகப்படியான மின்சார கட்டணத்தினால் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

தமிழக அரசு இதுபோன்று அதிகப்படியான மின்சார கட்டணத்தையும், அத்துடன் கூடுதலாக RC சார்ஜஸ் மற்றும் BPSC சார்ஜஸ் போன்ற தாமத அபராத கட்டணத்தையும் வசூல் செய்கிறார்கள். இந்த மின்சார கட்டணம் முறைகேட்டை கண்டித்து இன்று 07.07.2020 காலை 11 மணயளவில் அதிரை பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பதாகை ஏந்திய அமைதி வழி போராட்ட சமூக இடைவெளிவிட்டு, முக கவசம் அணிந்து மக்கள் போராட்டமாக நடைபெற்றது.

இதில் கீழ்கண்ட 4 அம்ச கோரிக்கைகள் தமிழக அரசிடம் நாம் தமிழர் கட்சி சார்பாக முன் வைக்கப்பட்டுள்ளது.

1. கொரோனா பேரிடர் கலத்தை கருத்தில் கொண்டு மின்சார கட்டணத்தில் 50 சதவீதம் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தள்ளுபடி செய்யவேண்டும்.

2. மின் கட்டணத்துடன் கூடுதல் அபராத தொகையாக இரண்டு மாதத்திற்கு ஒரு முறை RC Charges, BPSC Charges போன்று மக்கள் விரோத அபராத கட்டணத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும்.

3. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கணக்கெடுக்கும் மின் கணக்கீடு முறையை மக்கள் நலன் பெரும் வ்கையில் மாதத்திற்கு ஒரு முறை என்று கணக்கிட வேண்டும்.

4. கொரோனா பேரிடர் காலத்தில் வருமானத்தில் தத்தளிக்கும் நடுத்தர மக்களை கருத்தில் கொண்டு அனைத்து தமிழக மக்களுக்கும் வீட்டு மின்கட்டண செலுத்துதலில் தள்ளுபடியுடன் கூடிய கால அவகாசம் நீட்டிக்கபடவேண்டும்.

போன்ற கோரிக்கை முழக்கங்கள் முன் வைக்கப்பட்டன.

இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் அண்ணன் தேவராஜ் , பட்டுக்கோட்டை தொகுதி செயலாளர் நெல்சன் பிரபாகர் முன்னிலையில் நாம் தமிழர் கட்சி அதிரை நகர செயலாளர் ஜெஹபர் சாதிக் தலைமையில் சமூக இடைவெளி பின்பற்றி கோரிக்கை முழக்க போராட்டம் நடை பெற்றது. இதில் பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் எரிப்புறக்கரை நிர்வாகிகள் மற்றும் உறவுகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.




Post a Comment

0 Comments

'/>