அதிரை அப்துல் காதர் ஹஜ்ரத் மரணம்... மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!


அதிரை டுடே:ஜூன்.25
தப்லீக் ஜமாத்தின் முன்னோடி தலைவர்களில் ஒருவரும் , சிறந்த மார்க்க அறிஞருமான மரியாதைக்குரிய அதிரை. அப்துல் காதர் ஹஜ்ரத் அவர்கள் இன்று காலமாகி விட்டார்கள் என்ற செய்தியறிந்து வருந்துகிறோம்.

மெல்லிய தென்றல் காற்று போல, தன் பணிகளை அமைதியாக மேற்கொண்டு அனைவரின் அன்பையும் பெற்ற சான்றோராக வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

அன்னாரின் முன், பின் பாவங்களை மன்னித்து இறைவன் அவர்களின் மறு உலக வாழ்வை சிறப்பிக்க மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பிரார்த்திக்கிறோம்.

அன்னாரை இழந்து வாடும் அனைவரின் துயரத்திலும் பங்கேற்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி

Post a Comment

0 Comments

'/>