அதிரை டுடே:ஜூன்.22
அதிரை டுடே நியூஸ் குழுமம் துவங்கப்பட்டு தாங்களின் மேலான ஆதரவுடன் இரண்டாம் ஆண்டில் தனது பயணத்தை தொடங்கி உள்ளது.
அதிரையில் வாட்சப் குழுமமாக துவங்கப்பட்டு தற்போது அதிரை மற்றும் அதன் சுற்றுபுற நிகழ்வுகளை தினமும் உங்களுக்காக செய்திகளுடன் அதிரை டுடே நியூஸ் என்ற இணையதள செய்தி தளத்தை உறுவாக்கி அதிரையின் பல முன்னனி ஊடகங்களுக்கு இணையாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
கடந்த காலங்களில் எங்களால் ஏதேனும் வருத்தங்களோ தவறுகளோ இருக்குமாயின் அதை வரும் காலங்களில் திருத்தி கொண்டு செயல்பட உள்ளோம் எங்களின் முயற்சிக்கு உங்களின் உக்கத்தையும் வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவிப்பதோடு.
நிர்வாக ரீதியாக மேலும் சில நடுநிலையான சகோதாரர்களை இணைத்து முன்பை விட ஆக்கபூர்வமாக செயல்பட உள்ளோம்.
தொடர்ந்து எங்களின் பயணம் உண்மையாகவும், நேர்மையாகவும் செயல்பட வல்ல ரஹ்மான் உதவிசெய்வானாக என்னும் பிராத்தனையோடு அதிரைவாசிகள் மற்றும் அதிரை டுடேவின் இணையதள வாசகர்கள் அனைவரும் தாங்களின் மேலான ஆதரவையும், ஊக்கத்தையும் தர அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நிர்வாகிகள்
அதிரை டுடே நியூஸ் குழுமம்


0 Comments