வாட்ஸ்அப்-ல் இப்படியொரு ஒரு பிரச்சனையா? உஷார் மக்களே.!

வாட்ஸ்அப் செயலியை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக சிறிய தகவல்கள் முதல் செய்திகள் வரை இந்த செயலியில் பகிரப்படுகிறது. இந்த நிலையில் வாட்ஸ்அப் செயலியில் ஒரு புதிய பிழை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், அது கூகுளில் தேடலில் உங்கள் தொலைபேசி எண்ணை பிறருக்கு காண்பிக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


மொபைல் எண்களை ஆபத்தில் ஆழ்த்தியதாகக் கூறப்படுகிறது.

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், வலைதளத்திற்கு வருபவர்களுடன் வாட்ஸ்அப் அரட்டை அமர்வைத் தொடங்க பல வலைதளங்கள் Click to Chat வசதியைப் பயன்படுத்துகின்றன. எனவே வலைதளமும் தள பார்வையாளரும் வாட்ஸ்அப் எண்ணைச் சேமிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் தொடர்பு கொள்ளும் வசதி இதன் மூலம் அளிக்கப்படுகிறது. அதாவது மூன்றாம் தரப்பு சேவைகள் உருவாக்கப்பட்ட QR குறியீடு படத்தை ஸ்கேன் செய்வதன் மூலம்.

மேலே குறிப்பிட்ட இந்த செயல்முறையின் போது பயனர்களின் போன் நம்பர் URL இல் உள்ள எளிய உரையில் தெரிகிறது - https://wa.me/ - இதன் விளைவாக மோசடி செய்பவர்கள் வெளிப்படையான போன் நம்பர்களின பட்டியலை ஒன்றாக இணைத்து பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.


இதில் உள்ள பெரிய சிக்கல் என்னவென்றால், உங்கள் எண்ணைத் தேடக்கூடியது மட்டுமல்ல, உங்கள் எண்ணைப் பிடிக்கும் மோசடி செய்பவர்கள் உங்கள் பிற சமூக ஊடகக் கணக்குகளையும்,உங்கள் சுயவிவரப் புகைப்படத்தையும் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதேபோல் கடந்த நவம்பர் 2019-ல் ஒரு வித்தயாசமான பிழை தோன்றியது, அந்த பிழை (Bug) ஒரு MP4 கோப்பு வழியாக மோசமான கவலைகளைத் தூண்டியது.அதாவது வாட்ஸ்அப்-ல் யாராவது உங்களுக்கு ஒரு எம்பி4 கோப்பை அனுப்பியிருந்தால், அதை ஹேக்கர்கள் பதிவிறக்குவதை தடுக்கவும், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களில் ஸ்னூப்பிங் தாக்குதலைச் செய்ய ஹேக்கர்கள் பேஸ்புக்கிற்கு சொந்தமான பயன்பாட்டில் ஒரு முக்கியமான பாதிப்பை ஏற்படுத்தலாம் எனக் கூறப்பட்டது.

மேலும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட எம்பி4 கோப்பு ரிமோட் குறியீடு செயல்படுத்தல்(RCI) மற்றும் சேவை மறுப்பு (DOS) சைபர் தாக்குதலைத் தூண்டியதாகவும் கருத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

'/>