அதிரை டுடே:ஜூன்.23
அதிரை டுடே நியூஸ் இரண்டாம் ஆண்டை தொடர்கின்ற செய்தியை அறிந்து மகிழ்கின்றேன்.
நேர்மையை தவறுகின்ற ஊடகங்கள் என்று முன்பெல்லாம் ஊடகங்களின் தவறுகளை திட்டிதீர்த்து நம் மனக்குமுறல்களை வெளிப்படுத்தினோம். ஆனால் இன்று இறைவன் அந்த நேர்மையான ஊடகப்பணியை நம்முடைய கைகளில் தந்து பணியாற்ற வைத்து நேர்மையையும், நீதத்தையும் கடைப்பிடிக்கிறீர்களா என்று சோதிக்கின்றான் என்பதையே நாம் எண்ணி செயலாற்றிட வேண்டுகிறேன்.
எந்த துறைகளாயினும் மக்களுடைய ஆதரவை பெறவேண்டும் என்பது மட்டுமல்ல, நேர்மையோடும், நீதத்தோடும் செய்திகளை வெளியிட வேண்டும். அந்த வகையில் அதிரை டுடே ஊடகமும் என்றென்றும் நேர்மையையும், நீதத்தையும் வெளிபடுத்தி இறை திருப்தியை பெற வேண்டுமென பிரார்த்தனை செய்கின்றேன்.
இப்படிக்கு
M.ஜமாலுதீன்.
சமூக ஆர்வலர்
0 Comments