ஒடிசாவில் பயிற்சி போர் விமானம் நொறுங்கி 2 பேர் பலி
புவனேஸ்வர்: ஒடிசாவில் பயிற்சி போர் விமானம் நொறுங்கியதில் தமிழக விமானி உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர்.ஒடிசா மாநிலம், தென்கனல் மாவட்டம், கென்கதாஹாத் போலீஸ் ஸ்டேசனுக்கு உட்பட்ட பிரசல் விமான படை தளத்தில், பயிற்சியில் ஈடுபட்ட போர் விமானம் நொறுங்கியது. இதில் பீஹாரை சேர்ந்த கேப்டன் சன்ஜிப் குமார், மற்றும் தமிழகத்தை சேர்ந்த பயிற்சி விமானி அனிஸ் பாத்திமா ஆகியோர் உயிரிழந்தனர். உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த அனிஸ் பாத்திமா புகைப்படம்
0 Comments