ONGC குழாய் பழுதால் கழிவு நீர் கசிவு!நேரில் ஆய்வு செய்த MLA

நாகை தொகுதியில், திருமருகல் அருகில் உள்ள கோபுராஜபுரம் கிராமத்தில் 0NGC நிறுவனத்தின் கழிவு நீர் குழாய் உடைந்து அதிலிருந்து வெளியேறிய நீர் ஆற்றில் கலந்துள்ளது. இதனால் அப்பகுதியில் மீன்கள் செத்து மிதக்கத் தொடங்கியுள்ளது.

இன்று, அக்கிராமத்திற்க்கு மு.தமிமுன் அன்சாரி MLA வருகை தந்து நேரில் பார்வையிட்டார். அதன் பிறகு அக்கிராம மக்களை சந்தித்து விபரங்களை கேட்டறிந்தார்.
ONGC நிறுவனம் இப்பகுதி வளங்களை சுரண்டி விட்டு, இப்பகுதி மக்களுக்கு எந்த நலத்திட்டங்களும் செய்வதில்லை என்றும், கேள்வி கேட்டால் மிரட்டுகிறார்கள் என்றும் புகார் கூறினர்.
தங்களுக்கு ONGC நிறுவனம் ஒரு பாலம் கட்டித் தர வேண்டும். அல்லது 40 குடும்பங்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும் என்றும் கூறினர்.
ONGC நிறுவனத்துடன் கிராம மக்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்ற தான் வலியுறுத்துவதாகவும் கூறினார்.
அங்கு வந்த ONGC அதிகாரியிடம் உடனடியாக சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
இச்சந்திப்பின் போது ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, திட்டச்சேரி ரியாஸ், தோப்புத்துறை ஷேக் அஹமதுல்லா, ஏனங்குடி அன்வர், நிசாத் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

தகவல்,
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.

Post a Comment

0 Comments

'/>