பன்னூல் ஆசிரியர் அதிரை அஹ்மது மரணம்! மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!


அதிரை டுடே:மே.30
பல்வேறு அறிஞர்களையும், அரசியலாளர்களையும், எழுத்தாளர்களையும் தந்த ஊர்களில் அதிராம்பட்டினத்திற்கு தனி இடம் உண்டு.

அந்த வகையில் முஸ்லிம் சமூகத்திற்கு நற்சிந்தனைகளை ஊட்டும் பல நூல்களை எழுதிய பெரியவர் பன்னூல் ஆசிரியர் அதிரை அஹமது அவர்களும் ஒருவர்.

இன்று அவர் காலமானார் என்ற செய்தி வருத்தத்திற்குரியது.

குறிப்பாக அதிராம்பட்டினம் மக்களுக்கு இது பேரிழப்பாகும்.

அவரது நூல்களை புதுப்பித்து ,அதிரையில் அவர் பெயரால் ஒரு நூலகம் அமைப்பதே அதிரை மக்கள் அவருக்கு செய்யும் மரியாதையாக அமையும்.

இதில் அதிரையை சேர்ந்த அனைவரின் ஆக்கங்களையும் பாதுகாக்கவும் ஒரு வாய்ப்பு உருவாகும். இதை அதிரை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அவரை இழந்து வாடும் அனைவரின் துயரிலும் மனிதநேய ஜனநாயக கட்சியும் பங்கேற்கிறது. அவரது மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் பிரார்த்திப்போம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
31.05.2020

Post a Comment

0 Comments

'/>