அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு முக்கிய அறிவிப்பு.


அதிரை டுடே:மே.07
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு கூட்டம் கடற்கரைத் தெரு ஜூம்மா பள்ளியில் 06/05/2020 அன்று நிர்வாகக் கமிட்டித் தலைவர் அப்துல் ரஜாக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கொரோனாவினால் தற்போது நாட்டில் உள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவிக் கொண்டுள்ளதால் நமது ஜமாத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் ஆண்கள் பெண்கள் எதிர் வரும் ரமலான் பெருநாள் கொண்டாட்டத்திற்காக வெளியூர் சென்று புத்தாடைகள் , மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு செல்ல வேண்டாம் என அனைத்து ஜமாத்தார்கள் தங்கள் ஜமாத்தை சேர்ந்தவர்களுக்கு வலியுறுத்த வேண்டும் என்றும் வெளியூர்களுக்கு கொள்முதல் செய்வதற்காக செல்பவர்கள் அங்கு அரசு சொல்லும் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க முடியாமல் போகும் பட்சத்தில் நோய்த்தொற்று பரப்புவதற்கு காரணமாக அமைந்து விடும் என்பதால் இதனால் ஏற்படும் பாதிப்புகளை மக்களுக்கு எடுத்துக்கூறி வெளியூர் செல்வதிலிருந்து தவிர்த்துக் கொள்ளுதல் அவசியம் என அறிவுறுத்த வேண்டும்.

நமதூரில் தற்போது நடைபெற்று வரும் பால் விநியோகம் சம்பந்தமாக இனி வரும் காலங்களில் தங்கள் ஜமாஅத்தார்களுக்கு விருப்பம் இருப்பின் அதற்காக ஏற்பாடுகளை அந்தந்த ஜமாஅத்தார்கள் ஏற்பாடுகளை செய்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

தகவல்: அப்துல் ஜப்பார் துல்கருணை

Post a Comment

0 Comments

'/>