கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் புதிய சேவை தொடக்கம்

உலகை புரட்டிபோட்டுள்ள கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றது.

அதிரை டுடே.மே 05
குறிப்பாக நோய்த் தொற்று ஏற்பட்டு
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மக்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ள  மக்களும் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவது பரவலாக காணப்படுகிறது.

இந்த மக்களுக்கு உதவும் வண்ணம் மாநில அளவிலான ஆலோசனை மையம் ஒன்றை பாப்புலர் ஃப்ரண்ட் ஏற்படுத்தியுள்ளது.

இதில் தேர்ச்சிப் பெற்ற ஆலோசகர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவார்கள்.

இதற்காக தனியாக ஒரு தொடர்பு எண் - 7358 123 444  உருவாக்கப்பட்டுள்ளது. இது 24x7 என்ற அடிப்படையில் செயல்படும்.

COVID-19 நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டு ஆலோசனை பெற விரும்பும் நபர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு முறையான ஆலோசனைகள் வழங்கப்படும்.

இதன் துவக்க நிகழ்ச்சி நாளை (06.05.2020)  காலை 11 மணியளவில்Facebook/popularfronttamilnadu என்ற Facebook நேரலையில் நடைபெறும்.

பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் மு.முஹம்மது சேக் அன்சாரி அவர்கள் இதனை துவக்கி வைத்து அறிமுகப் படுத்துவார்கள்.

கொரோனாவில் இருந்து மக்களை மீட்டெடுக்கும் முயற்சியில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்...

Post a Comment

0 Comments

'/>