விமான பயணிகளுக்கான புதிய நெறிமுறைகள் -இனி விமான பயணம் எப்படி இருக்கும்? அதிரடி மாற்றம்

விமான பயணிகளுக்கான புதிய நெறிமுறைகள் -இனி விமான பயணம் எப்படி இருக்கும்? அதிரடி மாற்றம்


விமான பயணத்தில் பயணிகளுக்கான வழக்கமான நடைமுறையில் சில பாதுகாப்பு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது.அவைகள் விவரம் பின்வருமாறு.பயணிகள் விமான நிலையத்திற்கு உள்ளே வந்ததும், அவரது லக்கேஜ்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்படும்.
பயணிகள் கை கிருமிநாசினிகளால் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
பயணத்திற்கு முன்பு பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும்.
அடையாள அட்டை பயணச்சீட்டுகளை கையில் பெறாமல் அதிகாரிகள் இயந்திரம் மூலம் சரி பார்ப்பார்கள்.
அதிகாரிகள் பயணியின் அடையாளத்தை உறுதி செய்ய பயணிகள் முக கவசத்தை கழற்றி மீண்டும் அணிய வேண்டும் .
விமான பயணச் சீட்டுகளை பயணிகள் விமான நிலைய அதிகாரிகளிடம் மொபைல்போனில் காட்டலாம்.
கிருமி பாதுகாப்பு கவச உடை அணிந்து இருக்கும் பாதுகாப்பு அதிகாரி இயந்திரங்கள் மூலம் விமான பயணிகளை சோதிப்பார்.
பயணிகள் தங்களுடைய சாமான் களுக்கான அடையாளச் சீட்டை தாங்களே பெற்று தாங்களே சாமான்களில் ஒட்ட வேண்டும்.
விமானத்திற்காக காத்திருக்கும் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றி விமான நிலையங்களில் அமரவேண்டும் .
விமான நிலையங்களில் தற்போது நீண்ட நடைமுறைகள் இருப்பதால் பயணிகள் 4 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் செல்வது சிறப்பாகும்.
பயணிகள் அனைவரும் தங்களது மொபைல் போன்களில் ஆரோக்கிய செய்து செயலியை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
சிறிய அளவிலான 350 மில்லி அளவிலான கை கிருமிநாசினிகள் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

'/>