அதிரை டுடே:மே.08
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கொரோனா தடுப்புப்பணி தொடர்பாக சுகாதாரத்துறையின் ஆய்வுக் கூட்டம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.
இதில் தஞ்சை சுகாதாரத்துறை இணை இயக்குநர், சுகாதாரத்துறை ஆய்வாளர், பட்டுக்கோட்டை மற்றும் அதிரை சுகாதாரத்துறை அதிகாரிகள், அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் சுகாதார கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவும், கொரோனா பரவல் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
நோன்பு பிடித்துவிட்டு மக்கள் காலை நேரத்தில் உறங்குவார்கள் என்பதால், கணக்கெடுப்பு பணிக்கு செல்லும் ஊழியர்கள் அவர்களிடம் பொறுமையாக நடந்துகொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
அதிராம்பட்டினம் கொரோனா இல்லாத பகுதியாக தற்போது மாறி வருவதால், கணக்கெடுப்புக்கு செல்லும் ஊழியர்கள் அச்சப்படாமல் பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் அவர்கள் நம்பிக்கையூட்டினர்.
இந்நிகழ்ச்சியில், அதிரையில் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றி வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தன்னார்வலர்களின் சிறந்த பணிகளுக்காக பாராட்டு தெரிவித்து பாப்புலர் ஃப்ரண்டின் நகர செயற்குழு உறுப்பினர் Z.முகம்மது தம்பி BA.BL. அவர்களுக்கு அதிரை பகுதி சுகாதாரத்துறை அதிகாரியும் வட்டார மருத்துவ அலுவலருமான மருத்துவர் ரஞ்சித் அவர்கள் பொன்னாடை போர்த்தினார். மேலும் சுகாதாரதுறை அதிகாரிகள் பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
தகவல்
S.முஹம்மது ஜாவித்
நகர தலைவர்
பாபுலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
0 Comments