அதிரைக்கு விரைவில் மின் தடத்தில் மின்சார ரயில் இயக்க ஒப்புதல்

திருவாரூர்- காரைக்கால் மின் தடத்தில் மின்சார ரயில் இயக்க ஒப்புதல்- தெற்கு ரயில்வே பொது மேலாளர்
திருவாரூர்- காரைக்கால் மின் தடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்சார தடத்தில் சரக்கு ரயில்களை மின்சார இன்ஜினில் (Electric Loco) இயக்க தெற்கு ரயில்வே பொது மேலாளர் அனுமதி அளித்துள்ளார்.

இந்த மின் தடத்தில் கடந்த 28.03.2020 அன்று பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நாடு தழுவிய பொது முடக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் சரக்கு ரயில்களை இயக்க பொது மேலாளர் அனுமதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை கருத்தில் கொண்டு விரைவில் திருவாரூர் மார்க நமதூர் அதிராம்பட்டினம் வழியாக காரைக்குடி வரை மின்சார ரயில் சேவை இன்னும் சில மாதங்களில் தொடங்கும் என எதிர்க்கப்பாடுகிறது.
மின்சார ரயில் சேவை ஆரம்பித்தல் அதிகமான பொதுமக்கள் வெளியூர்,வெளி மாநிலம் செல்ல வசதிகள் இருக்கும்.

Post a Comment

0 Comments

'/>