பல சோகமான முடிவுகள் எடுக்க வேண்டியது இருக்கும் என்று சவுதி நிதியமைச்சர் அறிவிப்பு:
சவுதி கொரோனா பிரச்சினை காரணமாக வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவுக்கு மிக பெரிய பொருளாதார பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றது என்றும் இதன் காரணமாக பல்வேறு கடுமையான( சோகமான) முடிவுகளை எடுக்க வேண்டியது இருக்குமென்றும் சவுதி அரேபியாவின் நிதியமைச்சர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவிதுள்ளார். மேலும் இந்த பிரச்சினையில் இருந்து மீள்வதற்கு வருடங்கள் கூட ஆகலாம் என்று அவர் விளக்கியுள்ளார்.
இதையடுத்து சவுதியில் வரும் வருடங்களில் நடைமுறையில் கொண்டு
திட்டமிட்டுள்ள பல வேலைகள் முடிவதற்கு காலதாமதம் ஏற்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். மேலும் இதன் காரணமாக நாட்டின் குடிமக்களின் வேலை வாய்ப்புகளை உறுதிபடுத்தி, பல கடுமையான(சோகமான) முடிவுகளை எடுக்க வேண்டியது இருக்குமென்றும் அவர் அந்த செய்தி சானல் பேட்டியில் அவர் விளக்கியுள்ளார்.
மேலும் இதன் காரணமாக பல நாடுகளின் பொருளாதாரம் மற்றும் வியாபாரிகள் தொடர்பான பயணங்களை ரத்து செய்து, நடைமுறையில் கொண்டு வருவதற்கான
ஆலோசனை செய்துள்ள பல புதிய திட்டங்களை திட்டமிடதிலிருந்து சுருக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.
இதை தவிர பல திட்டங்களுக்காக நீக்கிவைக்கபட்ட தொகையை தற்போதுள்ள சூழ்நிலையில் சுகாதாரத்துறை துறையின் தேவைக்கு பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தினார் என்று அந்த அரபு செய்தி சானல் செய்தி வெளியிட்டுள்ளது.
இதையடுத்து இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு துறைகளில் வேலை இழக்கும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் கடுமையான வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு இந்த பிரச்சினையை சவுதி சந்திக்க வேண்டியுள்ளது என்று தெரிகிறது.
0 Comments