நாம் தமிழர் கட்சியை பற்றிய அதிரையர்களின் கேள்விகளே இது அதற்க்கு அதிரை நாம் தமிழர் கட்சி நகர செயலாளர் ஜீயாவூதீன் அவர்களின் விளக்கம் அளித்துள்ளார்கள்..!
இன்றயை கேள்விகள் நாளை மேலும் சில கேள்விகளுக்கு வீடியோ வடிவிலோ அல்லது எழுத்து வடிவிலோ பதில்கள் வரும்..!
1.நாம் தமிழர் தலைவர் சீமான் பற்றி உங்கள் கருத்து..?
பதில்...
சீமான், தமிழ்சமூகத்தின் உறுதியாக நின்று போராடும் போராளி.
தன் உரிமைகளை வென்றெடுக்க, தான் கொண்ட உறுதியில் சிறிதும் பிறலாமல், எவருடனும் கூட்டணி அமைக்காமல் 10 ஆண்டுகளாக தனித்தே களம் காண்பவர்.
எந்த பின்புலமும் இல்லாமல் மக்களின் ஆதரவை மட்டுமே எதிர்பார்த்து காத்து இருப்பவர்.
2.ஜியாவூதீன் எப்பொழுது சீயாவுதினாக மாறப் போகிறார்..?
பதில்..
ஜியாவுதீன், சியாவுதீனாக மாறுவதால், இஸ்லாம் தடுக்க வில்லை, நாம் தமிழர் கட்சி வற்புறுத்தவும் இல்லை.
ஆனாலும் நான் ஜியாவுதீனாகவே கட்சியில் பயணிக்கிறேன் தடைஇல்லை. தமிழில் பெயர் வைத்தால், இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிடுவார் என்கிற, குர்ஆன் வசனமோ, ஹதீஸ்களோ இருந்தால் சுட்டிகாட்டுங்கள்.
இஸ்லாமியர்கள் கூறுவதெல்லாம் இஸ்லாம் ஆகிவிடாது,
இஸ்லாம் கூறுவதையே இஸ்லாமியர்கள் கூறவேண்டும்,அதுவே சரியான இஸ்லாமிய பாதை
3.ஜியாவூதீன் நேரில் பழகுவதற்க்கு இனிமையாகவும் சமுகவலைதள பேச்சில் கடுமையாகவும் இடையே உள்ள வித்தியாசம் ஏன்..?
பதில்..
நான் அன்புகொண்டு அனைவரையும் நேசிக்கிறேன். நான் அனைவருக்குமானவன் என்பதால் நான் அனைவரிடமும் இனிமையாக பழகிறேன், அதுவே என் பிறதி குணமும்.
சமூக வலைதளங்களை பொருத்தவரை, தன் மனம்போன போக்கில் தங்கள் கருத்துகளை பதிவிடும் நபர்களிடம், சில நேரங்களில் சத்தியத்தை எடுத்துரைக்கும் நோக்கில், சில கடும் சொற்களை பயன் படுத்தியிருக்கலாம். ஆனாலும் நான் என் மனதில் பதிய வைப்பதில்லை.
4.இஸ்லாமிய அமைப்புகளில் பயணித்த நீங்கள் இஸ்லாமிய தலைவர்களிடமும் சீமானுடன் பயணிக்கும் போது அவரிடமும் கண்ட வித்தியாசங்கள் என்ன..?
பதில்..
இஸ்லாமிய இயக்கங்களில் பயணிக்கும் பொழுது, மதராஸா மாணவர்கள் பயன்படுத்தும் உடையை நாம் பயன்படுத்தும்பொழுது, அதை தடை செய்தார்கள். பாஷிச அமைப்பினர் நபிகளாரை சமூக வலைதளங்களில் இழிவு படுத்தி பதிவிட்டபொழுது, அந்த நபரின் மீது புகார் அளித்தபொழுது, நாம் தமிழர் கட்சி தடுக்கவில்லை, நான் பொருப்பில் இருந்த நிலையிலும்.
5.மதமாற்றத்தில் இடுபடுகிறாத நாம் தமிழர்..?
பதில்..
அவ்வாறு இருந்தால் இஸ்லாமிய தமிழர்கள் யாரும் அக்கட்சியில் பயணிக்க மாட்டார்கள். ஏன் நானே பயணிக்க மாட்டேன், தவறான புரிதலை இச்சமூகத்திற்கு விதைக்கிறார்கள்.
6.நாம் தமிழர் சாதம் அவர்களின் விசயத்தில் தங்கள் பார்வை..?
பதில்..
சதாமுடைய செயல் இஸ்லாமிய மார்கத்திற்கு முரணானது, இறைவனுக்கு ஷிற்கானது.
நாளை தொடரும்....
0 Comments