10 ம் வகுப்பு பொதுத்தேர்வை அந்தந்த பள்ளிகளிலேயே நடத்த முடிவு.


அதிரை டுடே:மே.15
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்து விட்டது. பலி எண்ணிக்கை 71 ஆக உள்ளது. இந்த நிலையில் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் விடுபட்ட பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போதிய சுகாதார வசதி , பேருந்து வசதி செய்து தரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் நடத்தப்பட்ட ஆலோசனையில் , 10 ம் வகுப்பு பொதுத்தேர்வை அந்தந்த பள்ளிகளிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் , மேலும் ஒரு தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே எழுதும் வகையில் ஏற்பாடு செய்யப்படலாம் என ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது

Post a Comment

0 Comments

'/>