அதிரை டுடே:மே.07
கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டு சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் தளர்வு கொண்டு வரப்பட்டு உள்ள நிலையில் 07/05/2020 முதல் நிபந்தனைகளுடன் டாஸ்மாக்கை (மதுக்கடை) திறக்க நேற்று முன்தினம் தமிழக அரசு அறிவிப்பு செய்தது.
இந்திலையில் டாஸ்மாக் (மதுக்கடை) கடையை திறக்க கூடாது என வலியுறுத்தி கையில் மதுவிற்கு எதிரான பதாகைகளுடன் சென்னை படூரை சேர்ந்த 5 சிறுவர்கள் ஆகாஷ், விஷ்டோரியா, ஆதர்ஷ், சபரி, சுப்ரியா ஆகியவர்கள் படூர் முதல் முதல்வர் இல்லம் வரையிலான சுமார் 30 கிமீ நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.
மதுவிற்கு எதிரான இச்சிறுவர்களின் முயற்சி வெற்றியடைய அதிரை டுடே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
0 Comments