கொரோனா பாதிப்பில்லாத இந்தியர்களை அனுப்பி வைக்க UAE நடவடிக்கை

அதிரை டுடே.ஏப்ரல் 11
கொரோனா பாதிப்பில்லாத இந்தியர்களை அனுப்பி வைக்க UAE  நடவடிக்கை


துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சில் சிக்கி தவிக்கும், கொரோனா பாதிப்பு அல்லாத இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டவர்களை, அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்ப தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியாவுக்கான யுஏஇ தூதர் தெரிவித்தார்.
கொரோனா வைரசால், உலக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர். பொருளாதார மந்தநிலை யுஏஇ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சை விட்டு வைக்கவில்லை. 

வெளிநாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அங்கும் வேலையிழந்துள்ளனர். பலருக்கு நீண்ட விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எப்போது முடியும் என தெரியாததால் அவர்கள் தங்களது சொந்த ஊர் சென்று குடும்பத்தினருடன் வசிக்க விரும்புகின்றனர். 
கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயலாற்றி வரும் யுஏஇ, தனது மக்களையும், வெளிநாட்டில் இருந்து வந்தவர்களையும் சிறப்பாக பார்த்து கொள்கிறது. இங்கு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்குள்ள தரமான மருத்துவ சேவையால், நூற்றுக்கணக்கானோர், கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவுக்கான யுஏஇ தூதர் டாக்டர் அகமது அப்துல் ரஹ்மான் அல்பன்னா, கூறுகையில், 'யுஏஇ.,யில் சிக்கி தவிக்கும் இந்தியா உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதில் கொரோனா அல்லாதவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கொரோனா அறிகுறி, பாதிப்பு உள்ளவர்களுக்கு இங்கே சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படும்.


எங்களிடம் கொரோனா பரிசோதனை செய்ய சிறந்த வசதிகள் உள்ளன. இதுவரை 5 லட்சத்துக்கும் அதிமான மக்களுக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. தங்கள் நாட்டிற்கு செல்ல விரும்பும் மக்களுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க நாங்கள் உறுதி அளிக்கிறோம். இதுகுறித்து யுஏஇ.,யில் உள்ள உள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் உட்பட அனைத்து தூதரகங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவிலிருந்து இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை' என்றார்.

Post a Comment

0 Comments

'/>