அதிரை டுடே:ஏப்.19
கிருஷ்ணாஜிபட்டினம் மற்றும் திருமங்களப்பட்டினத்தில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு SDPI கட்சி சார்பாக அரிசி வழங்கபட்டது. கடந்த சில மாதங்களுக்கு மேலாக கொரோனா என்ற கொடிய நோய் உலகையே அச்சுறுத்திய நிலையில் பல உயிர்கள் இழந்த நிலையிலும் இன்று வரை உலக மக்கள் அனைவரும் அச்சத்தில் இருக்கிறார்கள்.
நம் நாட்டில் மத்திய அரசு பிறப்பித்துள்ள உரடங்கு (144-சட்டத்தின்) காரணமாக அன்றாட தொழிலாளர்கள், ஏழை எளிய மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகள் என்பது பெரும் கேள்வி குறியாக இருக்கின்றன. இந்த நிலையை கருத்தில் கொண்டு (17/04/2020) அன்று கிருஷ்ணாஜிபட்டினம் மற்றும் திருமங்களப்பட்டினத்தில் அன்றாட தொழிலாளர் ஏழை எளிய மக்களுக்கு SDPI கட்சி கிருஷ்ணாஜிபட்டினம் நகர கமிட்டி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் முதல் கட்ட உதவியாக சுமார் 250 நபர்களுக்கு அரிசி வழங்கப்பட்டது.
PR.பட்டினம் ஊரில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கும் அரிசி வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார்கள். இது போல சேவைகள் மென்மேலும் கிருஷ்ணாஜிபட்டினம் ஊராட்சியில் தொடரும் என எதிர் பார்க்கபடுகிறது.
0 Comments