தஞ்சை(தெ) மற்றும் திருவாரூர் PFI சார்பாக தமிழக அரசும் காவல் துறையும் வெறுப்பு மற்றும் பொய் பிரச்சாரங்கள் பரப்புபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிரை டுடே:ஏப்.03
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகவும், தப்லீக் ஜமாத்திற்கு எதிராகவும் சங்கபரிவார இயக்கங்களால் தொடர்ந்து வன்முறை கருத்துக்களும் பொய் பிரச்சாரங்களும் பரப்பப்பட்டு வருகிறது.
உலகமே கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு பல உயிர்கள் இந்த கொடிய நோயிற்கு பலியாகி கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவில் இந்த பேரழிவிற்கு மதச்சாயம் பூசும் தனது வழக்கமான வேலையை சங்பரிவார சக்திகள் இன்று கையில் எடுத்துள்ளது. இதனை வழுபடுத்தும் நோக்கத்தில் அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையுடன் இந்த கொடிய நோயிற்கு எதிராக போராடி கொண்டு இருக்கும் தமிழகத்தில் சமூக வலைதளங்களில் தமிழகத்தில் உள்ள சங்கபரிவார சக்திகள் வன்முறை மற்றும் பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் அமைதியை குலைத்து கலவர சூழலை உருவாக்க இவர்கள் முயல்கின்றனர்.
இது குறித்து திருவாருர் மற்றும் தஞ்சை தெற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,
மேலும் தமிழக அரசும் காவல் துறையும் இது விஷயத்தில் துரிதமாக செயல்பட்டு தமிழகத்தின் அமைதியை காக்குமாறும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கேட்டு கொள்கிறேன்.
0 Comments