கடல்கரைத் தெரு ரேஷன் கடையில் அரசு அறிவித்த நிவாரன பொருட்கள் வினியோகம்.


கடல்கரைத் தெரு ரேஷன் கடையில் அரசு அறிவித்த நிவாரன பொருட்கள் வினியோகம்.

அதிரை டுடே:ஏப்.03
கொரோனா அச்சுருத்தல் காரனமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் மக்களுக்கு அரசு அறிவித்த நிவாரன பொருட்கள் மற்றும் ரொக்கம் 1000 ரூபாய் நேற்று முதல் வழங்கப்படுகிறது.

குடும்ப அட்டை தாரர்களுக்கு டோக்கன் வீட்டுக்கே வந்து தரப்படும் என்றும் நாள் ஒன்றுக்கு நூறு டோக்கன் வீதம் நிவாரன பொருட்கள் வழங்கப்படுகிறது.

கடல்கரைத் தெரு பகுதியில் நேற்று வீடு வீடாக சென்று ஐம்பது டோக்கன் வழங்கப்பட்டது. அவர்களுக்கு இன்று காலை முதல் பொருட்கள் வழங்கப்பட்டது. இன்று காலை ஐம்பது டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு இன்று மாலை பொருட்கள் வாங்கி கொள்ள அறிவுருத்தப்பட்டு உள்ளது.

பொருட்களை வாங்க வரும் மக்கள் ரேஷன் கடையில் சமூக விலகளை கடைபிடித்து பொருட்களை வாங்கி செல்ல கேட்டுக்கொள்ளபடுகிறது.



Post a Comment

0 Comments

'/>